புகார் அளித்த மாணவர் பிரகாஷ் 
தமிழ்நாடு

பிஎச்.டி. பட்டத்துக்கு பணம்: ஆளுநரிடம் பட்டம் பெறும்போதே புகாரளித்த மாணவர்

ஆளுநரிடம் பட்டம் பெறும்போதே புகாரளித்தார் பாரதியார் பல்கலை. மாணவர்

DIN

கோவை: தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர், ஆளுநர் ஆர்.என். ரவியிடமிருந்து பட்டம் பெறும்போதே, பல்கலைக்கழகம் குறித்து புகார்களை சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் இன்று மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி, மாநில உயர்கல்வித்துறை அமைச்சரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான முனைவர் கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியின்போது, பி.எச்டி பட்டம் பெற்ற பிரகாஷ் என்பவர், பட்டம் பெற்றுகொண்டு, பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஆளுநரிடம் எடுத்துக்கூறி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆர். பிரகாஷ். இவர் ஆங்கில மொழிப் பாடத்தில் இன்று முனைவர் பட்டம் பெற்றுள்ளார். முனைவர் பட்டத்துக்கான சான்றிதழை அவர் பெற்றுக்கொண்டு, ஆளுநரிடம் சில புகார்களை எடுத்துக் கூறினார். அதாவது, பிஎச்.டி. பட்டம் வழங்க வேண்டுமானால் நகை, பணம் கொடுக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் வற்புறுத்துவதாகவும், பேராசிரியர்கள் சிலர், சாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநரிடம் பிரகாஷ் புகார் அளித்ததை அதனை அங்கிருந்த பேராசிரியர்கள் சிலர் தடுத்தனர். ஆனால், அவர்களைத் தாண்டி, முனைவர் பட்டம் பெற்ற மாணவர் பிரகாஷ் புகார் அளித்தார்.

செய்தியாளர்களிடம் மாணவர் பிரகாஷ் கூறுகையில், முனைவர் பட்டம் பெறும் ஆய்வாளர்களுக்கான பிரச்னைகள் தொடர்பான புகாரை, பட்டம் பெறும்போது ஆளுநரிடம் கொடுத்ததற்காக ஆளுநர் என்னை மன்னிக்க வேண்டும். காரணம், எங்களைப் போன்ற ஆய்வாளர்களின் பிரச்னையை யாரிடம்தான் சொல்வது என்று தெரியவில்லை. பெரும்பாலான ஆய்வாளர்கள் பிரச்னையை வெளியே சொல்லவே அஞ்சுகிறார்கள். நான் ஒன்றும் தைரியசாலியில்லை. ஆனால், இதுதான் சரியான நேரம் என்று நினைத்து, இப்போது புகார் அளிக்க வேண்டும் என தோன்றியது.

எல்லா ஆய்வு நிபுணர்களையும் சொல்லவில்லை, சிலர், ஆய்வாளர்களை தவறாக நடத்துகிறார்கள். அதாவது வீட்டு வேலைகளை செய்யச்சொல்வது, குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்யச்சொல்வது, வங்கிக் கணக்குகளை பராமரித்தல் போன்ற அனைத்தையும் ஆய்வாளர்களை செய்யச்சொல்கிறார்கள்.

வாய்மொழியாக நேர்காணல் தேர்வுகளை நடத்தும் ஆய்வு நிபுணர்கள், ஆய்வாளர்களிடம் பணம், நகை அல்லது வீட்டுக்குத் தேவையான பொருள்களைக் கேட்கிறார்கள். அல்லது ஓட்டலுக்குச் சென்று சாப்பாடு வாங்கித் தரச் சொல்வது போன்றவற்றுடன், ஆய்வாளர்களின் வங்கிக் கணக்கு ஏடிஎம்களைக் கூட பிடுங்கி வைத்துக்கொள்ளும் அவலமும் இருப்பதாக பிரகாஷ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

பல்கலைக்கழக மாணவர் விடுதியை பராமரிக்க ஆண்டுக்கு ஒரு கோடி ஒதுக்கப்பட்டாலும் விடுதி பராமரிக்கப்படுவதில்லை. அந்தப் பணம் யாருக்குச் செல்கிறது என்று மாணவர் கேள்வி எழுப்பினார். பணம், நகை கொடுக்காவிட்டால், ஒரு சில பேராசிரியர்கள், ஆய்வுப் பணி சரியாக நடக்காது, வாய்மொழித் தேர்வு நடைபெற விடமாட்டோம் என மிரட்டுவதாகவும் கூறியிருக்கிறார்.

இறுதியாக நா தழுதழுத்தக் குரலில், வீட்டில் சாமான் தேய்க்கிறார்கள், காய்கறி வாங்கி வந்துக் கொடுக்கிறார்கள். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்கள், ஒரு நாய் போல ஆய்வாளர்களை நடத்தும்நிலைதின் உள்ளது. இது பற்றி பல்கலைக்கழகத்தில் புகார் அளிக்கும் சூழல் இப்போது இல்லை. ஆய்வாளர்களிடம் இதுபற்றி கேட்டுப்பாருங்கள். பலரின் நிலை இதுதான். இதனை மாற்ற வேண்டும் என்று பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT