புயல் சின்னத்தின் பாதை 
தமிழ்நாடு

புயல் சின்னம் எங்கே கரையை கடக்கும்? அடுத்த 3 நாள்களுக்கான தகவல்!

புயல் சின்னம் எங்கே கரையை கடக்கும் என்பது குறித்த தகவல்களும், அடுத்த 3 நாள்களுக்கான கணிப்பும்.

DIN

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசைடியல் நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறினால், அது சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், புயல் சின்னத்தின் வழித்தடத்தையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,

புயல் சின்னம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மிக மெதுவாகவே நகர்வதால், பல மணி நேரமாக அதே இடத்தில் நிலவுகிறது.

ஆழ்ந்த காற்றழுத்தம்

இது மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, புயல் சின்னத்தின் பாதை வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதும், இது புயலாக உருமாறினால் சென்னை - புதுவை - தெற்கு ஆந்திரம் இடையே கரையை கடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு மழை நிலவரம்

அக். 15 - செவ்வாய்க்கிழமை

அக். 16ஆம் தேதி

அக். 17

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT