கோப்புப் படம் 
தமிழ்நாடு

வீட்டில் திருட முயன்றவரை பொதுமக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

அரக்கோணம் அருகே வீட்டில் திருட முயன்ற நபரை பொதுமக்கள் தாக்கியதில் அந்த இளைஞர் உயிரிழப்பு

DIN

அரக்கோணம் அருகே வீட்டில் திருட முயன்ற நபரை பொதுமக்கள் தாக்கியதில் அந்த இளைஞர் உயிரிழந்தார்.

அரக்கோணம் அடுத்த பரமேஸ்வர மங்கலத்தை அடுத்த தென்றல் நகரில் சனிக்கிழமை (அக். 19) விடியற்காலையில் ஒரு நபர் ஒரு வீட்டில் திருட முயன்றபோது, அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்துள்ளனர்.

அந்த நபர் பலத்த காயம் அடைந்துள்ளார். தக்கோலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த நபரை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தக்கோலம் காவல் நிலைய போலீசார், அந்த நபர் அரக்கோணத்தை அடுத்த அரிகலபாடியைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் மாதேஷ் என்கிற திருமாதேஸ்வரன் (24) என்பது தெரியவந்த வந்தநிலையில் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தக்கோலம் போலீசார் மூன்று பேரைப் பிடித்து வைத்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT