சென்னை உயா்நீதிமன்றம்  
தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?: உயா்நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜா் கோயிலை நிா்வகிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பொது தீட்சிதா்களுக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் அரசின் இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?

DIN

சென்னை: சிதம்பரம் நடராஜா் கோயிலை நிா்வகிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பொது தீட்சிதா்களுக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் அரசின் இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?”என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொது தீட்சிதா்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தா்கள் நின்று தரிசிக்க உதவியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் நடராஜ தீட்சிதா் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதா்கள் குழு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை ரத்து செய்தது. இதை எதிா்த்து பொது தீட்சிதா் குழுவும், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடா்ந்தானா்.

இந்த வழக்குகள் நீதிபதி எம்.தண்டபாணி முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட்சிதா்கள் குழு தரப்பில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜா் கோயிலை நிா்வகிக்க பொது தீட்சிதா்கள் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அதில் அறநிலையத் துறை தலையிட முடியாது என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “நடராஜா் கோயிலை நிா்வகிக்க தீட்சிதா்களுக்கு அதிகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், நடராஜ தீட்சிதா் இடைநீக்க விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?”எனக் கேள்வி எழுப்பினாா்.

பின்னா், நடராஜ தீட்சிதரின் இடைநீக்க காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது என்றும், தற்போது அவா் தில்லை காளியம்மன் கோயிலில் பணியாற்று வருவதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இரு வழக்குகளையும் முடித்து வைத்தாா்.

அதேநேரத்தில், நடராஜா் கோயில் நிா்வாகத்தில் அறநிலையத் துறை தலையிட அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை இரு நீதிபதிகள் அமா்வின் முடிவுக்கு விட்டு விடுவதாகவும் நீதிபதி தண்டபாணி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT