சுந்தரி தொடர் விரைவில் முடிகிறது!
சுந்தரி தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகளை பிரமாண்டமாக படப்பிடிப்பு செய்ய குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி தொடர் விரைவில் முடியவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தரி தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகளை பிரமாண்டமாக படப்பிடிப்பு செய்ய குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சுந்தரி தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதே நடிகர்களை வைத்து சுந்தரி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
முதல் பாகத்தில் கிராமத்துப் பெணக் கணவனால் ஏமாற்றப்பட்ட நிலையில் போராடி ஆட்சியராகிறார். இரண்டாம் பாகத்தில் ஆட்சியரான பிறகு கணவரின் மற்றொரு மனைவி குடும்பத்தை ஏற்றுக்கொண்டு சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் அதிக டிஆர்பி பெறும் தொடர்களின் பட்டியலில் சுந்தரி தொடருக்கும் இடமுண்டு. தற்போது சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு போன்ற தொடர்கள் வந்ததால் சுந்தரி தொடர் சற்று பின்தள்ளியுள்ளது.
இதையும் படிக்க | மலையாளத்தில் நடிக்கும் தமிழ் சீரியல் நடிகை!
இந்நிலையில் இந்தத் தொடரின் இறுதிக்காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளன. இதனால் சுந்தரி தொடர் விரைவில் முடிகிறது எனத் தெரிகிறது. இதனால் சுந்தரி தொடரின் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.