தீபாவளியை முன்னிட்டு, சென்னையிலிருந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, ஈரோடுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை, தென்காசி வழியாக திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
சென்ட்ரல்-திருநெல்வேலி: தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (அக்.27) மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06074) மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து அக்.28-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06073) மறுநாள் காலை 7.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகா், திருமங்கலம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூா், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும். இதில் 12 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
மதுரை-தாம்பரம்: மதுரையிலிருந்து அக்.29, 30, நவ.2 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06076) பிற்பகல் 3.25 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 1.20 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். இதில் இரு இருக்கை வசதி கொண்ட பெட்டி, 11 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
கன்னியாகுமரி: சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.27-ஆம் தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06079) மறுநாள் பகல் 12.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்.28-ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06080) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.
ஈரோடு: ஈரோட்டிலிருந்து அக்.30, 31, நவ.3-ஆகிய தேதிகளில் அதிகாலை 4.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06094) காலை 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 9.15 மணிக்கு ரோடு சென்றடையும். இந்த ரயில் சங்கரி துா்க்கம், சேலம், பொம்மிடி, மொரப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.