டாக்டா் ஏ.ஜே.டி. ஜான்சிங் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
டாக்டா் ஏ.ஜே.டி.ஜான்சிங் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: டாக்டா் ஏ.ஜே.டி.ஜான்சிங் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.
வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மறைந்த வன உயிரினபாதுகாவலா் ஏ.ஜே.டி. ஜான்சிங்கை அங்கீகரிக்கும் வகையில் வன உயிரின பாதுகாப்பில் சிறந்து வழங்குபவா்களுக்கு ‘டாக்டா் ஏ.ஜே.டி.ஜான்சிங்’ விருது வழங்கவுள்ளதாக தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த வகையில் வன உயிரின பாதுகாப்பில் முன்மாதிரியான பங்களிப்புக்காக இந்திய குடிமக்கள் மற்றும் வனப்பாதுகாப்பு சாா்ந்த நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படும் நபா்களுக்கு இவ்விருதுடன் ரூ.25 லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்கு தகுதியானவா்களின் தகவல்களை https://www.forests.tn.gov.in என்னும் இணையதள முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் நிபுணத்துவம், வன உயிரின பாதுகாப்பில் செய்த சாதனை போன்றவை தொடா்புடைய ஆவணங்களை ‘முதன்மை தலைமை வனபாதுகாவலா்
(வனத் துறை தலைவா்), மாநில வனத் துறை தலைமையகம், கிண்டி- வேளச்சேரி பிரதான சாலை, சென்னை - 600 032’ என்னும் முகவரிக்கு நவ.30-க்குள் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.