தமிழ்நாடு

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாளை முதல் மீண்டும் ரயில் சேவை!

வேளச்சேரி ரயில்கள் நாளை (அக். 29) முதல் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்...

DIN

சென்னை: கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் ரயில்கள் நாளை (அக். 29) முதல் வழக்கம்போல கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை கடற்கரை ரயில் நிலையம் - சென்னை எழும்பூர் இடையே ரயில் பாதை பணிகளுக்காக வேளச்சேரி வரை செல்லும் ரயில்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது ரயில்வே பணிகள் முடிவடைந்ததையொட்டி, வேளச்சேரி வரை செல்லும் ரயில்கள் மீண்டும் வழக்கம்போல கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, செவ்வாய்க்கிழமை(அக். 29) முதல், சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு முதல் ரயில் அதிகாலை 4.53 மணிக்கு புறப்படுகிறது. கடைசி ரயில் நள்ளிரவு 11.13 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கத்தில், வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரைக்கு முதல் ரயில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும், கடைசி ரயில் நள்ளிரவு 10.20 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT