கோப்புப் படம் 
தமிழ்நாடு

2 நாள்களுக்கு ரயில்வே நடைபாதை டிக்கெட் விற்கப்படாது!

ரயில் நிலையங்களில் அக். 29, 30 ஆகிய 2 நாள்களுக்கு நடைபாதை டிக்கெட் விற்கப்படாது

DIN

தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகளவில் ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் ரயில் நிலையங்களில் அக். 29, 30 ஆகிய 2 நாள்களுக்கு நடைபாதை டிக்கெட் விற்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைபாதை டிக்கெட் விற்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நடைபாதை டிக்கெட் என்பது ரயில் நிலையத்துக்கு வரும் கூட்டத்தை சமாளித்து, அதிகாரப்பூர்வமுள்ள நபர்கள் மட்டுமே நடைபாதைகளை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கு மிகவும் அவசியமானது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே நடைபாதைகளில் டிக்கெட் விற்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நடைபாதை டிக்கெட் தேவைப்படாது.

பண்டிகையையொட்டி கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், மூத்த குடிமக்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், நடைபாதை டிக்கெட் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்ப்புகள் தேடிவரும் விருச்சிக ராசிக்கு: தினப்பலன்கள்!

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

SCROLL FOR NEXT