FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை

மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியது பற்றி...

30 அக்டோபர் 2024, 9:39 am IST
மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை - Din
பகிர்:

மதுரை: தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அவரது உருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குரு பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு மதுரைக்கு வருகை தந்தார்.

Advertisement

Advertisement

இதையடுத்து, புதன்கிழமை நடைபெற்ற தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்த தேவர் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை

இதைத் தொடர்ந்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மருதுபாண்டியர்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை

அப்போது, அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி. ஆர். பி. ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதன்பின், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கு சாலை மார்க்கமாக சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments