ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குரு பூஜை விழா இன்று நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக பசும்பொன்னுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், இன்று காலை கோரிபாளையத்தில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.