தமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்று செப். 5-இல் தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்று 5-ஆம் தேதியும், மாநில கலந்தாய்வின் இரண்டாம் சுற்று வரும் 11-ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.

DIN

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்று 5-ஆம் தேதியும், மாநில கலந்தாய்வின் இரண்டாம் சுற்று வரும் 11-ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.

இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 5-ஆம் தேதி இணையவழியில் தொடங்கவுள்ளது. அதேபோல், தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

இருமல் மருந்து விவகாரம்: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT