கோப்புப் படம் Din
தமிழ்நாடு

பொங்கல் ரயில்: ஜன. 11-க்கான டிக்கெட் சில நிமிஷங்களில் விற்று தீர்ந்தன!

பொங்கல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு பற்றி...

DIN

பொங்கல் பண்டிகைக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிஷங்களில் விற்று தீா்ந்து காத்திருப்போா் பட்டியலுக்கு சென்றது.

குறிப்பாக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனந்தபுரி, கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகா், பொதிகை, சிலம்பு, வைகை, பாண்டியன் உள்ளிட்ட விரைவு ரயில்களின் பயணச்சீட்டு நூறுக்கும் அதிகமான காத்திருப்பு பட்டியலுக்குச் சென்றதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஓரிரு நிமிஷங்களில் விற்பனை

தொலைதூரம் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பாகவே தொடங்கப்படும்.

அந்த வகையில் போகி பண்டிகை திங்கள்கிழமை (ஜன.13) வரவுள்ளதால் முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோா் வெள்ளிக்கிழமை (ஜன.10) முதல் தங்கள் பயணத்தைத் திட்டமிடுவா். அந்தவகையில் ஜன.10-ஆம் தேதி செல்வதற்கான முன்பதிவு பயணச்சீட்டு வியாழக்கிழமை (செப்.12) காலை 8 மணிக்கு தொடங்கி சில நிமிஷங்களிலேயே விற்று தீர்ந்தன.

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 11, சனிக்கிழமைக்கான ரயில் முன்பதிவு இன்று(செப்.13) காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஓரிரு நிமிஷங்களில் தென்மாவட்டங்களுக்கான ரயில்களின் பயணச்சீட்டுகள் விற்று தீர்ந்தன.

மேலும், கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சில பகல் நேர ரயில்களில் மட்டுமே பயணச்சீட்டுகள் உள்ள நிலையில், அதுவும் விரைவாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

நாளையும் வாய்ப்பு

போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளான ஜனவரி 12, ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரயில்களின் பயணச்சீட்டுகள் முன்பதிவு நாளை(செப்.14) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வியாபாரிகள் முற்றுகை: கடையடைப்பு

நகைகள் கொள்ளை வழக்கில் 50 பவுன் மீட்பு; ஒருவா் கைது

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நெல்லுக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ.3,160 ஆக அறிவிக்க வலியுறுத்தல்!

வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் தங்க நகைகள் திருட்டு!

SCROLL FOR NEXT