ஓ. பன்னீர்செல்வம்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த நினைப்பது நடக்காது: ஓபிஎஸ்

எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த நினைப்பது நடக்காது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

DIN

எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த நினைப்பது நடக்காது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் திருமாவளவன் பதிவு குறித்த கேள்விக்கு: பதிவு செய்ததும் அதை நீக்கியதும் திருமாவளவன் தான் அவர்தான் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். என்னுடைய அரசியல் பார்வையில். யார் கேள்வி கேட்டார்களோ மீண்டும் யார் வாபஸ் பெற்றார்களோ அவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

திருமாவளவன் இதை எதிர்த்து தான் கேள்வி கேட்கிறார்: சீமான்

மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு: திருமாவளவன் பொதுவாக தான் அழைப்பு விடுத்துள்ளார். எங்களுடைய நிலைப்பாடு குறித்து கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம் என்று ஏற்கெனவே சொல்லி இருந்தோம். இதற்கு பூர்வாங்க நடவடிக்கை எடுக்கும் போது இதற்கு பதில் கிடைக்கும்.

என்னை பொறுத்தவரை மது தமிழகத்தில் இருக்கக் கூடாது தான் என்னுடைய நிலைப்பாடு. முதல்வர் வெளிநாட்டு பயணம் உண்மையிலேயே அந்த முதலீடு ஈர்க்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்தால் தொழிற்சாலை துவங்கினால் உள்ளபடியே நான் வரவேற்பேன். பிரிந்த சக்திகள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் இளைய மகன் அரசியலில் உள்ள சூழலில் மூத்த மகன் அரசியலுக்கு வருவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா என்ற கேள்விக்கு: எங்கள் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அது நடக்காது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

SCROLL FOR NEXT