தேர்வு மையத்தை பார்வையிடும் எஸ்.கே பிரபாகர். 
தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? டிஎன்பிஎஸ்சி தலைவர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார்

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மையத்தை ஆய்வு செய்த பின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைப்பெற்று வருகின்றன.

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர நாட்காட்டியில் இந்த ஆண்டு 10 தேர்வுகள் நடத்த திட்டமிட்டோம். 8 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டுக்குள் திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளையும் நடத்த வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை 10,315 பேருக்கு டிஎன்பிஎஸ்சி வாயிலாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பத்தாயிரம் பேர் வரை வேலை வாய்ப்பு கிடைக்க தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

போராடும் இடத்திற்கே சென்று பயிற்சி மருத்துவர்களை சந்தித்த முதல்வர் மமதா

இந்தத் தேர்வுக்கான விடைக் குறிப்பு இன்னும் ஆறு வேலை நாட்களில் வெளியிடப்படும். அதில் ஏதாவது குழப்பங்கள் இருந்தால் மாணவர்கள் பதிவு செய்யலாம்.

தேர்வு தாள்கள் திருத்தும் பணிகள் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை நடக்கும். இந்த முறை தேர்வு நடவடிக்கைகளை முக்கிய கட்டங்களில் வீடியோ பதிவு செய்ய சொல்லி இருக்கிறோம். அதனால் இதுவரை எந்த பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை.

எல்லா மையங்களிலும் மருத்துவ உதவிகள், மின்சார வசதி, பேருந்து வசதி என அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலிருந்து ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்த தேர்வுகளை கண்காணிக்க துணை ஆட்சியர் அளவில் பறக்கும் படை செயல்பட்டு வருகிறது.

காலி இடங்கள் குறைவாக இருந்தாலும் படித்து முடித்தவர்கள் ஆர்வத்துடன் வந்து தேர்வு எழுதுகிறார்கள். விடைத்தாள்களை திருத்த கூடுதல் பயிற்சி பெற்ற நிபுணர்கள் கூடுதல் ஸ்கேனர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குரூப் 4 முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொகுசுக் கப்பல் அனுபவம்: வெள்ள பாதிப்புகளை பார்வையிடும்போது பேசுவதா? சர்ச்சையில் அமைச்சர்கள்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த அகிலேஷ் யாதவ்!

வெற்றி, தோல்விகளை விட முக்கியமானது கற்றல்... அஜித்தின் பொன்மொழி!

77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT