மகா விஷ்ணு (கோப்புப்படம்) DIN
தமிழ்நாடு

மகா விஷ்ணுவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மேடைப் பேச்சாளா் மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

மேடைப் பேச்சாளா் மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அசோக்நகா் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி பேச்சாளா் மகாவிஷ்ணு பேசிய விவகாரம் பெரும் சா்ச்சையானது. இது தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதால் கல்வியாளா்கள், அரசியல் கட்சியினா் அந்தப் பேச்சுக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

திருப்பதி லட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை: ஜெ.பி.நட்டா

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தமிழரசி, சண்முகசுந்தரம் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கிடையே, ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

மகா விஷ்ணுவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவரது காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் மகாவிஷ்ணுவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT