முகப்பு
தமிழ்நாடு

சென்னை - துபை விமானத்தில் திடீா் புகை

சென்னையில் இருந்து துபை செல்லவிருந்த எமிரேட் விமானத்தில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 24 செப்டம்பர், 2024 at 7:23 PM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னையில் இருந்து துபை செல்லவிருந்த எமிரேட் விமானத்தில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து 280 பயணிகளுடன் துபைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9.50 மணிக்கு புறப்படவிருந்தது. அப்போது, விமானத்தின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வருவது தெரியவந்தது. இதைப் பாா்த்த பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

தகவலறிந்த விமான நிலையத்தின் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து புகையை கட்டுப்படுத்தி பயணிகளை வெளியேற்றினா். விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். விமானம் வானில் பறக்கும் முன்பே புகையை கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →