ரஜினி(Photo-ANI) கோப்புப்படம்.
தமிழ்நாடு

திருப்பதி லட்டு விவகாரம்- ரஜினி சொன்ன பதில்

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டார்.

DIN

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டார்.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக கூறும் ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதேநேரம், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி, தனது அரசியல் ஆதாயத்துக்காக கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணா்வை அவா் புண்படுத்திவிட்டதாக விமா்சித்தது.

குல்காம் என்கவுன்டரில் 3 வீரர்கள் உட்பட 4 பேர் காயம்

பக்தா்கள் மத்தியில் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம், நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் கூலி படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் இருந்து சனிக்கிழமை சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆன்மீகவாதியான நீங்கள் திருப்பதி லட்டு விவகாரம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மன்னிக்கவும்” எனத் தெரிவித்து அதற்கு பதில் கூறுவதை அவர் தவிர்த்துவிட்டார்.

மேலும் தர்பாருக்கு பிறகு முழுவதும் போலீஸாக நடிக்கிறீர்கள் என கேட்டதற்கு, “ரொம்ப வித்தியாசமாக உள்ளது என்றார். வேட்டையன் திரைப்படத்திற்கு முன்பதிவு நடைபெறுவது குறித்த கேள்விக்கு “மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT