பலாப்பழம், முந்திரி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பண்ருட்டி பலா, முந்திரி உள்ளிட்ட 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு!

மேலும் 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு.

DIN

பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரிக்கு உள்ளிட்ட 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, செட்டிக்குளம் சின்ன வெங்காயம் உள்ளிட்ட 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இதன் மூலம், தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளைவிக்கப்படும் அல்லது குறிப்பிட்ட தனித்துவத்தோடு உருவாக்கப்படும் சிறப்பு வாய்ந்த, தனித்தன்மைகொண்ட பொருள்களை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசால் இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் புவிசார் பெற்ற பொருள்களை, எந்த நிலையிலும், வியாபார லாபத்துக்காகவோ, போலியாக வேறு யாரேனுமோ இந்தப் பெயரை பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் புவிசாா் குறியீடு பெற்றதில் தேசிய அளவில் 79 பொருள்களுடன் உத்தரப் பிரதேசம் முதல் இடத்திலும் 68 பொருள்களுடன் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் 11 பொருள்களுடன் தஞ்சாவூா் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மருதமலை கோயிலில் வெள்ளிவேல் திருட்டா? நிர்வாகம் மறுப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT