ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஏப். 4 உள்ளூர் விடுமுறை!
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை தொடர்பாக...
Updated On : 3 ஏப்ரல், 2025 at 6:36 PM
உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை (ஏப். 4 - வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களநாயகி அம்மன் கோயில் குடமுழுக்கு நாளை (ஏப். 4) நடைபெறுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 3 ஏப்ரல், 2025 at 6:46 PM
இந்த உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப். 10 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!