தவெக விஜய் கோப்புப்படம்.
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சம் ஏன்? -விஜய்

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சம் ஏன்? -விஜய்

DIN

கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சம் ஏன்? என்றும் தவெக தலைவர் விஜய் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழக மீனவர்களை காப்பாற்ற கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு என்று முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை பேரவையில் தெரிவித்திருந்தார். இதற்கென தனித்தீர்மானம் போடப்பட்டு சட்டப் பேரவையில் புதன்கிழமை முன்மொழியப்பட்டது. இதற்கு பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் க்டடிதம் இன்றை எழுதியுள்ளார்.

தாய்லாந்து சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இன்று மாலை இலங்கை செல்லவிருக்கிறார். இதனால், அவர் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இதுபற்றி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை, “ கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.

மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.

1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்திய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.

அன்று முதல் இன்றுவரை மத்திய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை. அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டபேரவைத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.

இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் மத்திய அரசு, எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கைவிடுவது ஏன்? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மத்திய பாஜக. அரசு.

கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது. எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், மத்திய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.

கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது. எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், மத்திய பா.ஜ.க.

அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது. கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க, பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு. நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும், தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு மத்திய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கை செல்லும் நம் பிரதமர் அவர்கள், 'கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்' என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும்.

நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பிரதமரின் இந்த இலங்கைப் பயணம், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னாலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு!

வீட்டில் பதுங்கிய 2 மரநாய்கள் மீட்பு

சென்னையில் 2,000 விநாயகா் சிலைகள் கடலில் கரைப்பு

சின்னா் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிா்ச்சித் தோல்வி!

SCROLL FOR NEXT