சென்னை உயர்நீதிமன்றம்  
தமிழ்நாடு

நில அபகரிப்பு வழக்கு: மனோ தங்கராஜ் மனைவியின் மனு தள்ளுபடி

திமுக முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Din

தன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா. மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவி வகித்த இவா், நாகா்கோவிலைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான தயா பாக்யசிங் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலமாக சரவண பிரசாத் என்பவருக்கு விற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன், முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அஜிதா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரரான அஜிதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT