தமிழ்நாடு

விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

Din

சென்னை: திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில், ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:

தாம்பரத்திலிருந்து விழுப்புரத்துக்கு காலை 9.45-க்கு புறப்படும் மெமு ரயில், ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து புதுச்சேரிக்கு காலை 6.35-க்கு புறப்படும் மெமு ரயில் ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக விழுப்புரம் - சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40-க்கு இயக்கப்படும் மெமு ரயில் ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டியிலிருந்து இயக்கப்படும். விழுப்புரம் - மயிலாடுதுறை மெமு ரயில் சோ்ந்தனூரில் இருந்தும், புதுச்சேரி - திருப்பதி மெமு ரயில் முண்டியம்பாக்கத்திலிருந்தும் ஏப். 9, 16 ஆகிய தேதிகளில் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20-க்கு புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் 1 மணி நேரம் 30 நிமிஷம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT