தமிழ்நாடு

வாணியம்பாடி: பள்ளிக் காவலாளி குத்திக்கொலை!

வாணியம்பாடியில் பள்ளிக் காவலாளி கொலை.

DIN

வாணியம்பாடியில் தனியார் பள்ளிக் காவலாளியைப் பட்டப்பகலில் மர்மநபர்கள் குத்திக்கொலை செய்யப்ப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக ஷாகிராபாத் பகுதியைச்சேர்ந்த இஃர்பான் என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று(ஏப். 7) காலை காலை வழக்கம்போல் பள்ளிக்கு மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துவந்த மர்மநபர்கள் திடீரென இஃர்பானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்த இர்ஃபான் சம்பவ இடத்திலே பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல்துறையினர் இர்ஃபானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர், இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தனியார் பள்ளியிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அந்த தியாகி யார்? பேரவைக்குள் பேட்ஜ் அணிந்துவந்த அதிமுகவினர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிஎஸ்கேவில் இணைந்த சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி!

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறை: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜிநாமா!

அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்த சிஎஸ்கே!

கடும் பனிமூட்டம்: சாலை விபத்துகளில் 25 பலி, 59 பேர் படுகாயம்

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

SCROLL FOR NEXT