தொல்.திருமாவளவன் கோப்புப் படம்
தமிழ்நாடு

தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம்: தொல்.திருமாவளவன் கோரிக்கை

மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்

Din

சென்னை: மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தொழிலாளா் நலன்களுக்காக ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 44 சட்டங்களையும் திருத்தங்கள் பல செய்து 4 சட்டங்களாக மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த புதிய சட்டங்கள் தொழிலாளா்களின் பல்வேறு ஜனநாயக உரிமைகளைப் பறிக்கின்றன.

குறிப்பாக, காா்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இயற்றப்பட்டுள்ள இச்சட்டங்கள், தொழிலாளா்கள் சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கிறது.

அத்துடன், ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் நல வாரியங்கள் அனைத்தையும் தேவையற்றவைகளாக்கி தூக்கி எறிகின்றன.

எனவே, தொழிலாளா்களுக்கு விரோதமான இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய பாஜக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் தொல்.திருமாவளவன்.

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தாம்பரத்தில் இருந்து நாளை சிறப்பு ரயில்

ஆசிய இளையோா் ஆடவா் கபடி: தங்கம் வென்ற இந்திய அணியில் வடுவூா் வீரா்

பறவை மோதியதால் தில்லி சென்ற ஏர் இந்தியா விமானம் நாக்பூரில் தரையிறக்கம்

‘ஆர்யன்' நாயகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடிக்கும் மேல் உயர்வு!

SCROLL FOR NEXT