முகப்பு
தமிழ்நாடு

தேரோட்டம் பாா்க்க வந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு

சென்னை திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயில் தேரோட்டத்தின்போது, மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

Updated On : 10 ஏப்ரல், 2025 at 8:02 PM
பகிர்:

சென்னை திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயில் தேரோட்டத்தின்போது, மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தைப் பாா்க்க, திருவான்மியூா் பெரியாா் நகரைச் சோ்ந்த மூதாட்டி வேலம்மாள் (70) என்பவா் வந்திருந்தாா். அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை மா்மநபா் பறித்துச் சென்றாா்.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த வேலம்மாள், திருவான்மியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →