பிரதிப் படம் 
தமிழ்நாடு

சென்னை: குறைந்துவரும் பேருந்து பயன்பாடு

இருசக்கர வாகனம், ஆட்டோ, வாடகைக் கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்

DIN

சென்னையில் போக்குவரத்துப் பேருந்துகளின் பயன்பாடு குறைந்திருப்பதாக உலக வங்கி மற்றும் சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

சென்னையில் 15 ஆண்டுகளில் போக்குவரத்து பயன்பாடு குறைந்திருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாநகரப் பேருந்துகளின் பயன்பாடு, 2008-ல் 26 விழுக்காடு என்று இருந்தது; ஆனால், 2023-ல் 18 விழுக்காடாகக் குறைந்தது.

மேலும், இருசக்கர வாகனங்களின் பயன்பாடு, 25 விழுக்காட்டிலிருந்து 37.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆட்டோ மற்றும் வாடகை கார்களின் பயன்பாடும் 4 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

பேருந்து செல்லும் வேகம், பேருந்துகளின் குறைவான எண்ணிக்கை, பேருந்துக்காக அதிகநேரம் காத்திருத்தல், பேருந்தில் நெரிசல் உள்ளிட்ட காரணங்களால்தான், பேருந்துகளின் பயன்பாடு குறைந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மேலும், இதனை அதிகரிக்க 2031 - 32 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 6,457 பேருந்துகளும், 2,343 பேருந்துகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

சம்-சம் லட்கியே... நிகிதா சர்மா!

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

SCROLL FOR NEXT