முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 
தமிழ்நாடு

காலணி அணியாத அண்ணாமலையின் சபதம் முறிந்ததா?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கைக்கு ஏற்று, அண்ணாமலை காலணி அணிந்தார்.

DIN

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கைக்கு ஏற்று, அண்ணாமலை காலணி அணிந்தார்.

சென்னை, வானகரத்தில் உள்ளதொரு திருமண மண்டபத்தில் இன்று(ஏப். 12) நடைபெற்ற கட்சி விழாவில், பாஜக மாநிலத் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியுள்ள நயினார் நாகேந்திரனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, அவர் அதிகாரபூர்வமாக கட்சி தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது, அண்ணாமலையை காலணி அணியுமாறு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, நயினார் நாகேந்திரனின் கோரிக்கைக்கு இணங்க, அண்ணாமலை காலணியை அணிந்து கொண்டார்.

முன்னதாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரையில், காலணி அணியமாட்டேன் என்று அண்ணாமலை சபதம் விடுத்திருந்தார். அதற்கேற்றவாறே, எங்கு சென்றாலும் காலணி அணியாமலேயே சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT