கோடை வெயிலில் குளிர்காயும் மழலை ANI
தமிழ்நாடு

ஏப். 17 வரை வெப்ப அலைக்கு வாய்ப்பு: சென்னை தப்பிக்குமா?

தமிழ்நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் ஏப். 17 வரை வெப்ப அலை நிலவும்

DIN

சென்னை: தமிழ்நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் ஏப். 17 வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏப். 17 வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இயல்பான வெப்பநிலையைவிட 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை(ஏப். 13) காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.1 டிகிரி செல்சியஸ் வேலூரிலும், அதற்கடுத்தபடியாக திருத்தணியில் 40.0 வெப்பநிலை வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

வெப்ப அலையானது சென்னை(என்பிகே) மற்றும் கடலூரில் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவிக்கிறது. இதனையடுத்து, சென்னையில் மேலும் 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சனிக்கிழமையும் வேலூரிலேயே அதிகபட்சமாக 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் திருத்தணி - 104, சென்னை மீனம்பாக்கம் - 103.46, கடலூா், சென்னை நுங்கம்பாக்கம் - (தலா) 102.56, ஈரோடு - 101.84, மதுரை விமான நிலையம் - 100.4, சேலம் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி!

SCROLL FOR NEXT