ஜான் ஜெபராஜ்.  
தமிழ்நாடு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கடந்த ஆண்டு நடந்த விருந்து நிகழ்ச்சியில் 2 சிறுமிகளுக்கு மதபோதகர் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீஸார் தலைமறைவான அவரைத் தேடி வந்தனர். மேலும் அவரைப் பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கேரள மாநிலம், மூணாறில் பதுங்கியிருந்த ஜான் ஜெபராஜை கோவை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

காலணி அணிந்தது குறித்து அண்ணாமலை விளக்கம்

இதைத்தொடர்ந்து அவரை கோவை அழைத்து வந்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஏப்.25 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சினாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஜம்மு - காஷ்மீரில் முக்கிய அணைகளின் அனைத்து மதகுகளும் திறப்பு!

ஆஹா கல்யாணம் நடிகைக்கு விரைவில் கல்யாணம்! காதலரைக் கரம்பிடிக்கிறார்!

அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை: பரிசுத் தொகை 4 மடங்கு அதிகம்!

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

SCROLL FOR NEXT