முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி எது செய்தாலும் வெற்றிதான்: செல்லூர் கே.ராஜு

எடப்பாடி பழனிசாமி எது செய்தாலும் வெற்றிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

Updated On : 13 ஏப்ரல் 2025, 12:45 pm IST
செல்லூர் கே.ராஜு.
பகிர்:

எடப்பாடி பழனிசாமி எது செய்தாலும் வெற்றிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

மதுரை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்னதாக அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, குடிநீர், மோர், இளநீர், தர்பூசனிப்பழம், பலாப்பழம், கொய்யாப்பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

குமரி கண்ணாடி இழை பாலம்: சுற்றுலாப் பயணிகளுக்கு 5 நாள்கள் தடை!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில், "கோடை காலத்தில் மக்களுக்காக குடிநீர், பழ வகைகள், ரோஸ் மில்க் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலம் முழுவதுமாக மக்களுக்காக நீர்மோர் வழங்க இருக்கிறோம்.

பதனீர் உடல் நலத்திற்கு நல்லது, ஆகவே செய்தியாளர்கள் பதநீர் அருந்தி செல்லுங்கள்.

அதிமுக பலம் வாய்ந்த கட்சி, எடப்பாடியார் எது செய்தாலும் வெற்றி வெற்றி வெற்றி" எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.