சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு. 
தமிழ்நாடு

திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து! சேகர்பாபு அறிவிப்பு!

திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் ரத்து தொடர்பாக....

DIN

கோயில்களில் முக்கிய திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், ”முக்கிய திருவிழா நாள்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதால் முதல்கட்டமாக 10 திருக்கோயில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாத பெளர்ணமி, பழனி முருகன் கோயில் தைப்பூச நாள் ஆகிய கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருநாளில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT