தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் கவனம் செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது, பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது. அடுத்தக்கட்ட வளர்ச்சியாக விண்வெளித்துறையில் கவனம் செலுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அடுத்த 5 ஆண்டுகளில், விண்வெளித் துறையில் ரூ. 10,000 கோடி முதலீட்டை ஈர்ப்பதுதான், இதன் முக்கிய மற்றும் முதன்மை இலக்கு. மேலும், 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல், விண்வெளித் துறைக்குத் தேவையான மற்றும் தகுதியானவர்களை உருவாக்குதலும் அடங்கும்.
பெரும்பாலும் உற்பத்தித் துறையில் மட்டும் கவனம் செலுத்தி வரும்நிலையில், விண்வெளித் துறையிலும் விண்வெளித்துறை சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். விண்வெளித் துறையில் உலகளாவிய போட்டிக்கு முதல்வர் ஊக்கமளித்துள்ளார். ரூ. 25 கோடி மதிப்புகொண்ட சிறு ஸ்டார்ட் கம்பெனிகளும் முதலீடு செய்ய ஊக்கமளிக்கப்படுகிறது.
தற்போது செயல் நுண்ணறிவு உதவியோடு, தமிழ்நாட்டிலும்கூட ராக்கெட்டை நாம் பிரின்ட் செய்கிறோம். எலான் மஸ்க்கின் நிறுவனத்துக்கு போட்டியாக, சென்னையிலும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதிய ம் தரக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மற்ற மாநிலங்களில் இதுபோன்று முன்னெடுப்பு தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.