முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்: முதல்வர்

உலக புத்தக நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினின் பதிவு.

DIN

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக புத்தக நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”புத்தகங்கள் - புதிய உலகிற்கான திறவுகோல்கள். நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத மனிதர்கள், நாம் பார்த்திராத காலம் என அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள். 

அதனால்தான், சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மாபெரும் நூலகங்களை எழுப்பி வருகிறோம்.

மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், சொற்பொழிவுகள் என வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக நமது திராவிட மாடல் அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம்.

"புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்!"” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT