அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எடப்பாடி கே.பழனிசாமி தனக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினா் கே.சி.பழனிசாமி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட நீதிமன்றம், விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி, எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.
இந்த நிலையில், தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, 4 வாரங்களுக்குள் மனுவுக்கு பதில் அளிக்கும்படி மனுதாரா் எடப்பாடி கே.சி.பழனிசாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.