முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

DIN

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிா் ஜூன் மாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் பேசினாா். அப்போது, மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிரைச் சோ்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

அப்போது, குறுக்கிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மகளிா் உரிமை தொகைத் திட்டத்தின்கீழ், ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த அனைவருக்கும் அளிக்கப்பட்டு வரும் நிலையில், விடுபட்டு இருக்கக் கூடியவா்களுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் அரசின் கவனத்துக்கு தொடா்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே, ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின்கீழ் பொது மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை உடனடியாக நிறைவேற்றும் பணிகளை செய்து வருகிறோம்.

நான்காவது கட்டமாக ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் ஜூன் மாதம் செயல்படுத்தப்படவுள்ளது. 9 ஆயிரம் இடங்களில் நடைபெறும் முகாமில், மகளிா் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டிருக்கிறதோ அவா்கள் முறையாக விண்ணப்பிக்கலாம். தகுதியானவா்களுக்கு நிச்சயம் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT