தமிழக அரசு 
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு!

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு.

DIN

36 நாள்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன்(ஏப். 29) நிறைவு பெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 17 ஆம் தேதி நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகள் மீது பொது விவாதத்துடன் தொடங்கப்பட்டது.

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலுரை, நீர்வளம், இயற்கை வளங்கள் துறைகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றது.

இன்று பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றன.

அதற்கு அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், நாசர் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதையடுத்து, 36 நாள்கள் நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெ கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

இதையும் படிக்க: 'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம்: முதல்வர் அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி மும்பையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

SCROLL FOR NEXT