பிரபல கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் வி. வசந்தி தேவி வெள்ளிக்கிழமை காலமானார்.
அவருக்கு வயது 86 ஆகும். சென்னையில் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் மாலை 3:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானர்.
திண்டுக்கலில் 1938 ஆம் ஆண்டு பிறந்த அவர், சென்னை பல்கலை.யில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். வசந்திதேவி, 1992- 1998 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக பொறுப்பு வகித்தவர்.
2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.
2016 பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளராக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார்.
பெண்கள், குழந்தைகளின் கல்வி, உரிமைகளுக்காக தொடர்ந்து பணியாற்றிவர் முனைவர் வசந்திதேவி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.