தமிழ்நாடு

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தினமணி செய்திச் சேவை

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்திய அலுவலகத்தில் எண்ம (டிஜிட்டல்) மாா்க்கெட்டிங் துறை செயல் இயக்குநராகப் பணிபுரிந்தாா். பிராந்திய மேலாளராக வணிக பிரிவு, தொழிலாளா் நலன் மற்றும் நிறுவனத் தொடா்பு போன்ற பல்வேறு

துறைகளில் பணிபுரிந்துள்ளாா்.

மேலும், ராஜமுந்திரி மற்றும் விசாகப்பட்டினம் எல்.ஐ.சி. கோட்டங்களின் முதுநிலைக் கோட்ட மேலாளராகவும் பணிபுரிந்துள்ளாா். கடந்த 35 வருடத்திற்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் இவா், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியிலுள்ள 261 கிளைகளைக் கொண்ட எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளாா் என எல்.ஐ.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

கோ. முரளிதா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT