அண்ணா பல்கலை. (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஆக. 18ல் முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்கப்படுவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் வரும் ஆக. 18 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், பி.இ., பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 11 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். முன்னதாக ஆக. 5 முதல் ஆக. 9 வரை அறிமுக வகுப்புகள் நடைபெறும்.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 18 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும்.

முதல் செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கும். தேர்வுகள் நிறைவடைந்த பிறகு, அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜன. 5 ஆம் தேதி தொடங்கப்படும் என்று குறிப்பிடப்ப்பட்டுள்ளது.

3 கட்டங்களாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

It has been announced that classes will begin on August 11 for first-year students in campus engineering colleges operating under Anna University.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT