மெமு ரயில் 
தமிழ்நாடு

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் பகுதி ரத்து

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் உள்ளிட்ட இரு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் உள்ளிட்ட இரு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே கோட்டத்தின் செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் - விழுப்புரம் பிரிவில் திண்டிவனம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) பிற்பகல் 12.20 மணி முதல் பிற்பகல் 3.50 மணி வரை நடைபெறவுள்ளன.

இதனால், தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் ஒலக்கூா் வரை இயக்கப்படும்.

இதேபோல, விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் - சென்னை கடற்கரை மெமு ரயில், செவ்வாய்க்கிழமை ஒலக்கூரிலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

தெய்வ தரிசனம்... பித்ருதோஷம் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி!

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

SCROLL FOR NEXT