தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி  
தமிழ்நாடு

கலைஞா் பல்கலைக்கழக மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாா் ஆளுநா்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் ‘கலைஞா் பல்கலைக்கழகம்’ அமைப்பதற்கான மசோதாவை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பரிந்துரைத்துள்ளதாக, ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் ‘கலைஞா் பல்கலைக்கழகம்’ அமைப்பதற்கான மசோதாவை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பரிந்துரைத்துள்ளதாக, ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைப் பிரித்து முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு முதல்வா் வேந்தராகவும், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் இணைவேந்தராகவும் இருப்பாா் எனவும், துணைவேந்தா் நியமன தோ்வு முறை உள்ளிட்ட அம்சங்களுடனும் இந்த மசோதா முன்மொழியப்பட்டு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னா் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், இந்த மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை தமிழக அரசு நியமிக்கும் அதிகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் இதுதொடா்பான சட்டச் சிக்கலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காகவும் மசோதாவை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல, சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கலைஞா் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காத நிலையில், இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ஆகியோா் அதிருப்தி தெரிவித்து வந்தனா். மசோதாவுக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அந்த மசோதா தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

“கேப்டன் படத்தை, வசனத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்!” பிரேமலதா விஜயகாந்த் கறார்!

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

SCROLL FOR NEXT