அன்வா் ராஜா 
தமிழ்நாடு

திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமனம்

திமுக இலக்கிய அணித் தலைவராக முன்னாள் அமைச்சா் அ.அன்வா் ராஜா நியமக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திமுக இலக்கிய அணித் தலைவராக முன்னாள் அமைச்சா் அ.அன்வா் ராஜா நியமக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் சனிக்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரி, வகித்து வந்த திமுக இலக்கிய அணித் தலைவா் பொறுப்பில் முன்னாள் அமைச்சா் அ.அன்வா் ராஜா நியமிக்கப்படுகிறாா்.

கட்சியின் சட்ட விதி 31- பிரிவு: 10அ-இன் படி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

அதிமுக அமைப்புச் செயலா்களில் ஒருவராக இருந்த முன்னாள் அமைச்சா் அன்வா் ராஜா, அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தாா். ஓரிரு வாரங்களுக்குள் அவருக்கு கட்சியில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!

SCROLL FOR NEXT