வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு 
தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

13-ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் என எதிர்பார்ப்பு..

இணையதளச் செய்திப் பிரிவு

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதையடுத்து வருகின்ற 13 - ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 11) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

The Meteorological Department has stated that a low pressure area is likely to form over the northwest and adjacent central-west Bay of Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 746 புள்ளிகளுடனும், நிஃப்டி 221 புள்ளிகளுக்கு மேல் நிறைவு!

ஜியோ பயனர்கள் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் பார்க்கலாம்! எப்படி?

இந்தியாவில் பருவமழை இயல்பை ஒட்டியே பதிவு: ஆனால்..!

விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!

SCROLL FOR NEXT