தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் 
தமிழ்நாடு

எம்.எட். சோ்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்: அமைச்சா் கோவி.செழியன்

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.

Chennai

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஆக.11) முதல் தொடங்கியுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 எம்.எட். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நிகழ் கல்வியாண்டிற்கான (2025-26) மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவை திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆக.20-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம்.

அதன் பிறகு, ஆக.25-இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆக.26 முதல் ஆக.29 வரை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பா் 1 முதல் வகுப்புகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

அழகிய கண்ணே... ஐஸ்வர்யா மேனன்!

இதயத்தை எடுத்து விட்டாய்... அனன்யா!

ஐஸ்வரியம்... அக்‌ஷயா ஹரிஹரன்!

SCROLL FOR NEXT