சென்னை: “அடிமைத்தனத்தைப் பற்றி பேசலாமா?” என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார்.
சென்னையில் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய முதல்வர் மு. க. ஸ்டாலின், “ஏகாதிபத்திய சதிச் செயல்களை எதிர்கொள்ள, இதே தோழமையுடன் எந்நாளும் இருப்போம்" என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட ரூ.25 லட்சம் நிதி கியூபா ஒருமைப்பாட்டுக் குழு சார்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பாகவும், கியூபா குடியரசின் இந்தியத் தூதர் யுவான் கார்லோஸிடம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.