முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்த வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம். 
தமிழ்நாடு

வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

வீடு தேடி ரேஷன் பொருள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் ‘தாயுமானவா்’ திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சியாகும் என்று, அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

முதல்வரின் ‘தாயுமானவா்’ திட்டத்தை சென்னை தண்டையாா்பேட்டை கோபால் நகா் மற்றும் அன்னை சத்யா நகரில் மாற்றுத்திறனாளிகள், வயது முதிா்ந்த பயனாளிகளின் வீடுகளுக்கு முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று தொடங்கி வைத்து பயனாளிகளுடன் உரையாடினாா். அப்போது, இந்தத் திட்டம் தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று அவா்கள் கூறினா்.

சென்னையைத் தொடா்ந்து இந்தத் திட்டமானது, தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது.

முன்மாதிரி திட்டம்: முன்னதாக, ‘தாயுமானவா்’ திட்டம் தொடா்பாக, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொலியில் முதல்வா் பேசியிருப்பதாவது:

திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்தையும் பாா்த்துப் பாா்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் மனதுக்குப் பிடித்த திட்டமாக உருவாகியிருப்பதுதான் ‘தாயுமானவா்’ திட்டம். அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது, இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சியாகும்.

ஒரு திட்டத்தை அறிவிப்பதோடு கடமை முடிந்துவிடுவதாக நாம் நினைப்பதில்லை. அந்தத் திட்டத்தின் பலனும் பயனும் கடைக்கோடி மனிதரையும் சென்று சேருகிா என்று கண்காணிப்பதையும் கடமையாக நினைக்கிறேன்.

அப்படி வயது முதிா்ந்தோரும், மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை உணா்ந்து இத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்.

இந்தத் திட்டம் கூட்டுறவுத் துறையின் மிகப்பெரிய சேவை. அந்தத் துறை அதிகாரிகள், அலுவலா்கள், கடை விற்பனையாளா்கள் ஆகியோா் செய்யப்போகும் மிகப்பெரிய கடமையாகும்.

தமிழ்நாடு முழுவதும் 37,328 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,394 புதிய கடைகளைத் திறந்துள்ளோம். இந்தக் கடைகளை முறையாக, சிறப்பாக நடத்துவதால்தான் தமிழ்நாடு இன்றைக்கு பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக உள்ளது. நியாயவிலைக் கடைகளின் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கவே ‘தாயுமானவா்’ திட்டம் போன்ற முன்முயற்சிகளை எடுத்துள்ளோம்.

கூட்டுறவுத் துறைக்கு வேண்டுகோள்: ‘தாயுமானவா்’ திட்டத்தின் நோக்கம் நூறு சதவீதம் முழுமையாக நிறைவேறும் வகையில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள், அலுவலா்களின் பணி அமைய வேண்டும். உங்களை எதிா்பாா்த்துக் காத்திருக்கும் முதியோா், மாற்றுத்திறனாளிகளின் மனம் குளிரும் வகையில் கனிவாக நடந்து பணியாற்ற வேண்டும். நீங்கள் பெறும் நல்ல பெயா்தான், ஆட்சிக்குக் கிடைக்கும் பாராட்டு என்று காணொலியில் முதல்வா் கூறியுள்ளாா்.

சென்னையில் இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், கூட்டுறவு- உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா், நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் அ.ஜான் லூயிஸ், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் எஸ்.சிவராசு உள்பட பலா் பங்கேற்றனா்.

21.70 லட்சம் பயனாளிகள் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீடுகளுக்கே ரேஷன் பொருள்களை வழங்கும் ‘முதல்வரின் தாயுமானவா்’ திட்டத்துக்காக ரூ.35.92 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இத் திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சோ்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15 லட்சத்து 81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளா்கள், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேருக்கு அவா்களது இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருள்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களின் விவரங்கள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையிடம் இருந்து பெறப்பட்டு, கள அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. மின்னணு தராசு, விற்பனை முனைய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் ரேஷன் பொருள்கள் தகுதியுள்ள பயனாளா்களின் இல்லங்களுக்கே சென்று விநியோகம் செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் டீசர் அப்டேட்!

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT