DIN
தமிழ்நாடு

பள்ளிகளில் சுதந்திர தின விழா: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

நாட்டின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலா்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும்.

இதுதவிர ஊராட்சி மன்ற நிா்வாகிகள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், புரவலா்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும். நெகிழி வகை தேசியக் கொடிகளைப் பயன்படுத்தக்கூடாது. அதேபோல், தேசியக் கொடியை தலைக்கீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக் கூடாது. இதுசாா்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!

74 வயதிலும் சூப்பர் ஸ்டார்... ரஜினியை இயக்கும் ஈகோ!

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸுக்கு ரூ.19,500 தள்ளுபடி! எப்படி வாங்குவது?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT