வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, எர்ணாகுளம் சந்திப்பு - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் (06061) ஆகஸ்ட் 27, செப்டம்பர் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில் (06062) ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் கொல்லம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மானாமதுரை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாகச் செல்லும்.
இதேபோல திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர ரயில்(06115) ஆக. 27, செப். 3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.25 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
வேளாங்கண்ணியில் இருந்து(06116) ஆக. 28. செப். 4 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும்.
அடுத்து சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஆக. 28, செப். 4, 11 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.35 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
வேளாங்கண்ணியில் இருந்து ஆக. 29, செப். 5, 12 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.30 மணி தாம்பரம் வந்தடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.