சென்னை: தமிழக அரசின் 50 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக மக்கள் பயன்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின்படி, வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவை வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில், வாட்ஸ்ஆப் மூலம் சொத்து வரி, தொழில் வரி, பிறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும்.
இதற்காக சென்னை மாநகராட்சி 94450 61913 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது.
புதிய திட்டம்
அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழக மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் இந்த திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டு, முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும் தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளை பெற முடியும் என்று இந்த திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம், குடிநீர் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்துவது,வரி செலுத்துவது, மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த ஒரே சாட்பாட்டின் மூலம் பெற முடியும்.
ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதையும் படிக்க.. இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.